Wednesday, June 10, 2009

வதைக்கும் மின்வேலி முகாம்: பலியாகும் தமிழர்களின் அவலம்


இலங்கை வடக்குப்பகுதியில் சிங்கள ராணுவம் நடத்திய இன அழிப்புப் போரால் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக மாறி உள்ளனர்.

சொந்த மண்ணிலேயே அவர்கள் மின் வேலியிடப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாத அந்த முகாம்களில் தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

10 பேர் நிற்கக் கூட முடியாத இடத்துக்குள் 10 பேர் தூங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதனால் முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியவர்களில் 14 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தனர். கடந்த 8-ந் தேதி 8 முதியவர்கள் மரணம் அடைந்தனர். சரியான உணவு, தூக்கம் இல்லாமல், வெயில், மருந்து இல்லாதது, சுகாதாரமற்ற குடிநீரால் அவர்கள் உயிரிழக்க நேரிட்ட தாகத் தெரிய வந்துள்ளது.

மரணம் அடைந்த 22 முதியவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல் லப்பட்டுள்ளது. அவர்கள் உடலை, பெற்று இறுதிச் சடங்கு செய்ய நெருங்கிய உறவினர்கள் எவரும் இல்லை என்று தெரிகிறது.

No comments:

Post a Comment