
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தலைவர் சி.ராசன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’இலங்கையில் நமது உரிமைக்காக 60 ஆண்டு காலம் போர் நடத்தப்பட்டு உள்ளது. சிங்கள மக்களோடு ஒன்றிணைந்து சம உரிமையோடு போராடுவதற்காக முதல் 30 ஆண்டு காலம் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் வன்முறை இல்லை. அறவழியிலேயே நடத்தப்பட்டது.
அந்த அறவழி போராட்டத்தை சிங்கள அரசு ராணுவத்தை கொண்டு அழித்தது. அறவழியால் நமது கோரிக்கைகள் ஏற்கப்படாததால்தான் போராட்டத்தின் வழியை மாற்றி கொள்ள வேண்டியதாயிற்று. ஆயுதம் ஏந்தி 30 ஆண்டு காலம் போரிட்டு விட்டோம். இந்த போராட்டத்தின் இலக்கு தனி ஈழம் அமைவது.
பிரபாகரன் தலைமையில் நடந்து வந்த அரசில் நீதி இருந்தது. நிர்வாகம் சிறந்த முறையில் நடந்தது. அங்கு சாதி, மதம் வேறுபாடு கிடையாது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். நிலமை இப்படியே போனால் தமிழ் ஈழம் கிடைத்து விடும் என்று விடுதலைப்புலிகளை அழித்தார்கள்.
61/2 கோடி தமிழர்களை உள்ளடக்கியது தானே இந்தியா. அந்த தமிழர்களின் ரத்த உறவு, தொப்புள் கொடி தானே ஈழத்தமிழர்கள். தமிழர்களை இந்திய அரசு அடிமைகள் என்று நினைக்கிறதா?. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக போராட மத்திய அரசு நம்மை கட்டாயப்படுத்தி விட்டது.
ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் அங்கு தனி அரசு அமைவது ஒன்றே தீர்வு. இதற்காக உலக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்’’என்று பேசினார்.
நன்றி :- நெருடல் இணைய தளம்
No comments:
Post a Comment