Monday, June 29, 2009

நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...??!!

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.


ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ - உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் -

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.

பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.

பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.

பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.

பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.

பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.

இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.


- சுந்தரராஜன் (sundararajan@lawyer.com)

(நன்றி: மக்கள் சட்டம்)



உலகின் அமைதியான நாடுகள்

எக்கானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரப்படி உலகின் அமைதியான நாடு என்ற பெருமையை நார்வே பெற்றுள்ளது. இப்பட்டியலில் கடைசி இடம் இராக்குக்கு. இராணுவச் செலவு, ஆயுதவிற்பனை, ஊழல், மனித உரிமை மீறல், சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அந்தப் பட்டியலின்படி மிக அமைதியான பத்து நாடுகள், அமைதி குறைந்த பத்து நாடுகளின் வரிசை வருமாறு:

மிக அமைதியான நாடுகள்:

1. நார்வே
2. நியுசிலாந்து
3. டென்மார்க்
4. அயர்லாந்து
5. ஜப்பான்
6. பின்லாந்து
7. சுவீடன்
8. கனடா
9. போர்ச்சுகல்
10. ஆஸ்திரியா

அமைதி குறைந்த நாடுகள்:

1. இராக்
2. சூடான்
3. இஸ்ரேல்
4. இரஷ்யா
5. பிலிப்பைன்ஸ்
6. தென்னாப்பிரிக்கா
7. ஹோண்டுராஸ்
8. இரான்
9. அமெரிக்கா
10. யேமன்

விரைவில் இந்தியா இதில் இடம் பிடிக்கும் !!!

குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?


குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கக் கூடாது. காரணம் என்னவெனில் எல்லா குளிர்பானங்களிலும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. லெமன் சுவை கொண்ட குளிர்பானங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டுவகை அமிலங்களும் பற்களுக்கு எதிரி. இந்த அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலை சுரண்டி எடுத்துவிடும். குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களை பற்களில் படும்படியாகக் குடிப்பது மிக மிகக் கெடுதல். ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி நேரிடையாக வயிற்றுக்குள் அனுப்புவது ஓரளவு பரவாயில்லை. சில பன்னாட்டுக் நிறுவன குளிர்பானங்களில் அவை நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பூச்சி மருந்துகளை சேர்க்கிறார்கள். அவை உடல்நலத்துக்கு மிகவும் கேடானவை. அத்தகைய பானங்களை எப்போதும் தவிர்க்கலாம்.


நன்றி : WHO



Saturday, June 27, 2009

உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!

சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.

காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.

மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.

இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.

ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.

வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.

பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.

அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.

நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?

தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது.

நன்றி :- திரு . அதி

Thursday, June 25, 2009

குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! - உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்


சத்திஸ்கர் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென் (Dr. Binayak Sen) என்பவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்?

யார் இந்த பினாயக் சென்?

தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும்.

இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச் சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு (பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.

வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார்.

ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழகத்துடன் (Peoples’ Union for Civil Liberties) இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத் துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக் கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார். அதே நேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது.

ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் ஏதுமில்லை.

சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டு வருகின்றனர்.

இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார்.

அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனித உரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம்.

மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை.

சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்!

டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு:

http://www.freebinayaksen.org/

http://www.savebinayak.ukaid.org.uk/

http://www.binayaksensupport.blogspot.com/

நன்றி - சுந்தரராஜன் (sundararajan@lawyer.com)

(நன்றி: மக்கள் சட்டம்)

Thursday, June 18, 2009

குமுறுகிறார் அருந்ததிராய் - இனப்படுகொலை

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் - மனித உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் அருந்ததிராய் - அண்மைக்காலம் வரை விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று எழுதியவர் - இப்போது நியாயத்தை உணர்ந்து குமுறுகிறார்; ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து:

“ஏன் இந்த மவுனம்? ‘இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயல்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை’ என்று இன்னொரு நேர்காணலில் இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை ‘அச்சத்தில் உறைய வைக்கிற’ கொலைக் கும்பல்கள், ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ பற்றி எல்லாம் சமரவீரா தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உள்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் இலங்கை அரசு பயன்படுத்துவதாக பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாற்றியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு பொருளுதவியும், ஆய்த உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாது.

கொள்ளை போகும் தண்ணீர்- கட்டுரை

நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.

அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி. இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள்.

இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம்.

நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.

தண்ணீர் விநியோகம்

இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம் மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.

இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.

இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டைக் காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.

திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.

தொழிற்சாலைகள் சுரண்டல்

இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்) நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன.

சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.

தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.

- ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்.

- நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.

- குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.

இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

அன்றாட வேலைகளில் தண்ணீர் சேகரிப்பு

- பல் விளக்கும்போது கப்பில் எடுத்து பயன்படுத்தலாம், குழாயைத் திறந்துவிட வேண்டாம்.

- குளிக்கும் போது வாளியில் குளியுங்கள், ஷவர் வேண்டாம்.

- பிளஷ் டாய்லெட்டில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும், அதிக தண்ணீரை சேகரிக்கும் தொட்டி வேண்டாம்.

- காய்கறிகளை சட்டியில் இட்டு கழுவுங்கள், அப்படியே கழுவ வேண்டாம்.

- நடைபாதை, படி, வண்டி ஓடுபாதைகளை விளக்குமாறால் கூட்டுகள். தண்ணீரால் கழுவ வேண்டாம்.

- செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, வாகனங்களைக் கழுவ வாளியை பயன்படுத்துங்கள், ஹோஸ் பைப் வேண்டாம்.

(இன்று உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

நன்றி: கோபர் டைம்ஸ், டவுன் டு எர்த், தர்ஸ்ட் ஃபார் பிராஃபிட், ....

- பூவுலகின் நண்பர்கள், சென்னை

Tuesday, June 16, 2009

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்


ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.



- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.



(நன்றி-- ஆதி--- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)

Monday, June 15, 2009

வன்னியில் தமிழ்மக்களின் அவலங்கள் - ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்?

காயமடைந்து வேதனையில் துடிதுடிக்கும் பிஞ்சுப் பாலகர்களை
அரவணைத்து பால் கொடுக்க தாய் இல்லை. ஆதரிக்க உறவினர் இல்லை.
இந்த நிலையில் ஆதரவு இல்லங்களுக்கு எடுத்து வந்து
பராமரிக்கப்படும் பிஞ்சுகள் இவை.

மாட்டுத் தொழுவங்களை விட மோசமாக இருக்கும் மனிதர்களுக்கான
சிகிச்சை அளிக்கும் இடங்கள். இவற்றையும் விட்டால் வேறு வழியில்லை...

ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்
அவன் சொந்தங்களே அழமுடியாத நிலை. இறந்தவர்களை விட
இருப்பவர்களை காப்பதுதான் இப்போதுள்ள அவசரம்

இதற்கு மேலும் எங்கே இடம்பெயர்வதென்று தெரியவில்லை.
ஆனாலும் தொடர்கின்றது இடப்பெயர்வு

உயிரைப் பாதுகாக்க இப்படித்தான் ஆட்டு மந்தைகள்போல் காயமடைந்தவர்கள்
திருகோணமலை, புல்மோட்டைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

தகவல் : சிவா


உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள்


வெடிகுண்டு வாங்க கோடி ரூபாய் கொடுத்த நாடுகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு கொடுக்க முடியவில்லை; உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள் வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது.

பஸ்களிலும், வீதியோரங்களிலும், பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட பல கட்டடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்ட வண்ணம் உள்ளனர்.

உடைமைகள் அனைத்தையும் இழந்து, பல மாதங்களாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதிய உணவு, மருத்துவ வசதிகளின்றி வாழ்ந்த களைப்புடன், கடுமையான பசியும், தாகமும் வாட்ட, சீரான உடைகள் எதுவுமின்றி நடைப்பிணங்கள் போல இவர்கள் வவுனியாவை வந்தடைந்துள்ளனர்.

பிச்சைக்காரர்கள்?

"ஒரு பெரும் பிச்சைக்காரக் கூட்டமே வந்திறங்கியிருப்பதுபோல் இவர்களைப் பார்க்க மிகவும் பரிதமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடிருப்பதைவிட செத்துப்போயிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது'' என்று இந்த அவலத்தை வர்ணித்தார், வவுனியாவிலிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர்.

கூட்டம் கூட்டமாக அழைத்துவரப்படும் இந்த மக்கள் தொகையில் சிறுவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக மற்றுமொரு தொண்டு நிறுவனப் பெண் பணியாளர் தெரிவித்தார்.

உள்ளாடைகளுடன் வரும் பிள்ளைகள்

"10 முதல் 15 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளைகள் ஆடைகள் எதுவுமின்றி வெறும் உள்ளாடையுடன் வந்ததைக் காண மனம் பதைக்கிறது. எங்கள் மக்களுக்கு ஏனிந்த அவலம்'' என்று அழுகையை அடக்க முடியாத சோகத்துடன் அவர் எம்மிடம் தகவல் தெரிவித்தார்.

பலர் இன்னமும் அவர்கள் அழைத்துவரப்பட்ட பஸ்களிலேயே தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், சில தற்காலிக தங்குமிடங்களில் வயோதிபர்கள் சிலர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலை அகற்றவும் வசதியில்லாத நிலையில் மக்கள் இருப்பதாகவும் அந்தத் தொண்டு நிறுவனப் பணியாளர் கூறினார்.

ஏற்கனவே கடந்த பல மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு வந்த சுமார் 70ஆயிரம் பேர் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளன.

பெரும்பாலான முகாம்களில் போதிய இடவசதியின்மை, மலசலகூட வசதியீனம், சீரான நீர் விநியோகம் இல்லாத நிலை என்று மக்கள் ஏற்கனவே பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென ஓரிரு தினங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதால், இவர்களுக்கு வேண்டிய அவசர உதவிகளைச் செய்ய முடியாமல் அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் திண்டாடுவதாக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

வவுனியா தாங்காது

"வவுனியாவின் வழமையான மொத்தச் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சனத்தொகைக்கு அளவான அடிப்படைக் கட்டுமான வசதிகளே இங்குள்ளது'' என்று தெரிவித்த வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுடன் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர்,

இப்போது திடீரென மேலதிகமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரை இலட்சம் பேருடன் சேர்த்து அங்கிருக்கும் மூன்றரை இலட்சம் பேருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அடிக்கட்டுமான வசதிகள் வவுனியாவில் கிடையாது என்று குறிப்பிட்டார்.

சுமார் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தொகையான மக்களுக்கு நாளாந்தம் உண்பதற்கு உணவு வழங்குவதென்பது சாத்தியமில்லாத காரியம் என்று தெரிவித்த அவர், போதியளவு உணவுப்பொருள் இருந்தாலும், அவற்றை ஒன்றரை இலட்சம் பேருக்கும் விநியோகம் செய்வது பெரும் சிரமமான காரியம் என்று தெரிவித்தார்.

"ஆனால், உணவுப்பொருள்களும் போதியளவுக்கு இங்கு இல்லை என்பதுதான் துயரம்'' என்று தெரிவித்த அவர், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இந்த மக்களுக்கு உதவுவதற்குத் தம்மிடம் போதிய நிதி வசதிகள் இல்லை என்று கைவிரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஒருவேளை உணவேனும்...

இவ்வளவு தொகை மக்களுக்கும் உணவு சமைத்து வழங்குவது சாத்தியமில்லை என்பதால், அவர்களை சுமார் 250 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, பெரிய சமையல் பாத்திரங்களையும், அரிசி மற்றும் மரக்கறிகளையும் வழங்கி, தாமே சமைத்து உண்ணும் நிலைமையை ஏற்படுத்த முனைவதாக ஐ.நா. தொண்டுப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

"குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவேனும் இவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கே இப்போது நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார் அவர்.

உதவி செய்யுங்கள்

உடனடிப் பசியையும், தாகத்தையும் போக்குவதற்கு பிற்கட் பெட்டிகளும், போத்தலில் அடைக்கப்பட்ட நீரும் வழங்குவதே மிகவும் பொருத்தம் என்று குறிப்பிட்ட அவர், இந்த மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இவற்றை பெருந்தொகையாக வாங்கியோ, அல்லது அதற்கான பணத்தைக் கொடுத்தோ உதவி செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களை மாத்திரம் நம்பியிராமல், அவலப்பட்டுள்ள இந்த மக்களுக்கு உதவுவதற்கு இந்த நாட்டிலுள்ள மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் முன்வரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

நன்றி : திரு .சிவா

நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்!


கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு. தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள இராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,

''இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள இராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள். பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை, மனச்சாட்சியுள்ள இராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சிங்கள இராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது. நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது, இராணுவத்தினரிடம் பிடிபட்டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க... அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி விட்டது. இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் ராணு வத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்! பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன. கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர், அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!
அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. ராணுவத்தின் நடவடிக் கைகளை ஆழமாகக் கவனித்தால்... 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்' என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது. வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட.
தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..!
''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன. ரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம். சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமி, ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங் களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.
தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள். 'கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்!' என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் ராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில் அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும் மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன. குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட நினைப்பதில்லை. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..!'' என்கிறார்கள் வன்னிப் பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!



நன்றி : திரு .சிவா

பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்: சீமா‌ன் ஆவேசம்

பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பேசுகை‌யி‌ல்,

"இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா, சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க்குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள்.

எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு ல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?

தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.

பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்.

தி‌ருகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌வர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை.

சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா சொ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை?ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை.

சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்னா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா?

நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?

இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்.

ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர். அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிதை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.

இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌ஜ்பா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டுகிறே‌ன்.

இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். வைகோ, தா.பா‌ண்டிய‌ன் பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் இரு‌ந்தா‌ல், த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் கட‌லி‌ல் சுட‌ப்ப‌ட்டு செ‌த்‌திரு‌ப்பா‌ர்களா? இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.

இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன்.

இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சினையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.

இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது.

தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது.

எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம்" எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.

இலங்கை அரசின் தடுப்பு முகாம்,"தேசிய வெட்கக் கேடு" : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300,000 பொதுமக்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கை அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த தடுப்பு முகாம்கள், "தேசிய வெட்கக் கேடு" என அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறி, ஒரு வருடத்திற்குள் அதிகமாக தடுப்பு முகாம்களை நிறுவி, மோதல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அங்குள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளாக அரசாங்கம் கருதுவதாக அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பொது மக்கள் அனைவரையும் மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் முகாம்களில் உள்ள விடுதலைப் புலி போராளிகளை அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அரசாங்கத்தினால் நிவாரணக் கிராமங்கள் என அழைக்கப்படும் இடங்களிலும் பொது மக்களுக்கான நடமாட்ட சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல்களினால் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 300,000 தமிழ் பொது மக்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகாம்களில் உள்ள பொது மக்கள் தாம் தங்குவதற்கு வேறு இடங்கள் இன்றி முகாம்களில் வசிப்பதில்லை எனவும், அங்கிருந்து அவர்கள், வெளியேற அரசாங்கம் அனுமதிக்காத நிலையிலேயே முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முகாம்களில் அதிகரித்த சன நெரிசல் காரணமாக, முகாம்கள் பொது மக்கள் தங்குவதற்கான வசதியான சூழ்நிலையை கொண்டிருக்கவில்லை எனவும் எதிர்கால பருவ பெயர்ச்சி மழை காரணமாக மிகவும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து வாழ விரும்பும் பொது மக்களை, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி : ஒரு தமிழ் இணையத்தளம்

இறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்: இலங்கை இராணுவம் அத்து மீறல்: மனித உரிமை குழு


இலங்கையில் வன்னியில் கடைசி கட்ட போரில் குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, இறந்தவர்களோடு சேர்த்து இராணுவத்தினர் புதைத்தனர் என்று மனித உரிமை குழு கூறியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைக்காக போராடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையை லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

இலங்கை இராணுவத்தினர் கடைசி கட்ட போரின்போது மேலதிகாரிகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ள உத்தரவிட்டபோது அதற்கும் ஒரு படி கீழிறங்கி நடந்து கொண்டனர்.

அப்பாவி மக்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த பதுங்கு குழிகள் மீது இராணுவத்தினர் இராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கினர்.

காயம் அடைந்து குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, அவர்களை இறந்தவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக புதைத்தனர்.

சரணடைந்த விடுதலைப் புலிகளையும் சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சர்வதேச கருணை கழகம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் கடைசி கட்ட போரின் போது நடந்த அத்துமீறல்கள், சித்திரவதை பற்றி சர்வதேச கமிஷனை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளது.


நன்றி : www.paristamil.com

ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !

சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும்.

நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய அங்கில ஊடகங்களோ ஈழப் போரின் முடிவாக இதைக் கொண்டாடி மகிழ்கின்றன.

ஆங்கில ஊடகத்தின் தமிழகப் பிரிவில் வேலை பார்க்கும் எனது பெண் நணபர் ஒருவர் நேற்று என்னிடம் கேட்கிறார். மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் பொடி எல்லாம் எடுத்துட்டாங்களாமே? உங்களுக்குத் தெரியுமா?

எங்கம்மா இறந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும் பிரபாகரன் இறந்தாரா? அவரது மனைவி இறந்தாரா? என்பதெல்லாம எனக்குத் தெரியாது? பொதுவாக இவர்கள் இறப்பதில்லை என்பது மட்டும் தெரியும். நீங்கள் டில்லி டெஸ்கிற்கு செய்தி கொடுத்து விட்டீர்களா? இலங்கை அரசின் ஆர்மி சைட்டில் இதை போட்டிருக்காங்களா? என்று கேட்டேன் அவரோ எங்க சேனல்ல ப்ளாஸ் நியூஸ் போகுது என்றார். எனக்கு எதுவும் அதிர்ச்சியாக இல்லை. சிறிது நேரத்தில் எஸ்,எம்,எஸ் ரூகள் தொலைபேசி அழைப்புகள் விசாரிப்புகள் எதுவும் அதிர்ச்சியாக இல்லை. கடந்த சில நாட்களாகவே இறுக்கமாக மட்டுமே இருக்க முடிகிறது தமிழக மக்களைப் போல,

இலங்கையின தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரை இந்தியா நடத்துகிறது. இலங்கை நடத்தி முடித்த இன அழிப்பின் பின்னரான உளவியல் சிதைப்புப் போரை இலங்கையின் தூதரகத் திட்டத்தோடு வட இந்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் ஒரு இனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் எந்த நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் செய்யவில்லை என்பதோடு. தூதரக அதிகாரிகளோடு தமிழக ஊடகவியலார்களும் நெருக்கம் பேணினார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

வட இந்திய ஊடகங்கள் ஈழப் போரின் தோல்வியை இலங்கை சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கவில்லை. அவர்கள் தமிழகத்தில் வாழும் ஏழு கோடி மக்களின் தோல்வியாகவே பார்க்கிறார்கள். இவர்களின் தோல்வி அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்து ராம். சோ ராமசாமி, சுப்ரமணியம் ஸ்வாமி போன்ற இலங்கை அரசின் நட்புச் சக்திகள் இந்தக் கொண்டாட்டங்களின் தமிழக முகங்களாகவோ முகவர்களாகவோ இருக்கிறார்கள்.

ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தப் போர் காட்சி ஊடகங்கள் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்குகிறது. ஈராக்கிய யுத்தத்தின் போது எப்படி சி.என்.என் தொலைக்காட்சி அமெரிக்க பயங்கரவாதத்திற்கு வலது கரமாக இருந்து பிரச்சாரம் செய்ததோ அது போலவே சகல வட இந்திய ஊடகங்களும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இந்திய சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டு உரிமைப் போரில் எல்லாக் காலத்திலும் தமிழகமே முன்னணியில் நின்றது.

உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது வட இந்திய உயர்சாதி மாணவர்கள் துடைப்பங்களை எடுத்து நீங்கள் எல்லாம் டாக்டருக்குப் படிக்க வந்தால் நாங்கள் தெருக்கூட்டப் போகிறோம் என்று வீதிக்கு வந்ததை மிகப் பெரிய போராட்டமாக சித்தரித்து அதை தமிழ் மக்களுக்கு எதிராக சித்தரித்ததும். ஓகேனக்கல் நீர் உரிமை தொடர்பான போராட்டங்கள் வெடித்த போது அதை தமிழ் சாவனிசம் என்று ஒடுக்கிய போக்கையும ; நாம் கடந்த காலத்தில் கண்டோம். அந்த தொடர் வன்மத்தின் வெளிப்பாடுதான் இன்றைய ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற போக்கு.

பெருந்தொகையான மக்களை இன அழிப்பு செய்து நிலத்திலிருந்து மக்களைப் பிரித்து அவர்களை முகாம்களுக்குள் முடக்கி இந்தியா இலங்கையில் ஆடியிருக்கும் நரவேட்டை ஒரு பக்கம் அந்தப் போருக்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்த போது அதை ஒடுக்கி அச்சுறுத்தி அடக்கிய விதம் எல்லாம் சேர்த்து இன்று தமிழக மக்களிடம் இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்திருக்கிறது.

( தேர்தல் வெற்றி எல்லாம் சும்மா சொல்வது அது குறித்து தனியாக எழுதுவேன்) மனுக்கொடுப்பது சத்தியாகிரகம் என்பது போன்ற ஐம்பதுகளில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வு என்னவாக இருந்ததோ அது போன்ற ஒரு உணர்வலை இன்று தமிழகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான கடும் போக்கு தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இதைத் தடுக்க முடியுமா? என்று தெரியவில்லை ஏனென்றால் குறைந்த பட்சம் போராடுகிற மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் மதித்திருக்க வேண்டும். தொடர் நாடகங்கள் மூலம் தேர்தல் வெற்றி கிடைத்த பிறகு இலங்கை பிரச்சனை தமிழகத்தில் ஒரு பிரச்சனையே அல்ல என்று செய்கிற உதாசீனம் இந்தியாவின் தேசீய மனோபாவத்தில் இருந்து தமிழக மக்களை வெகுவாக விலக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வெகுமக்கள் அரசியலில் தலைமைகள் இல்லாத சுழலில் அடிப்படை மாற்றத்திறாக போராடும் இடது அமைப்புகள் இந்த இளைஞர்களின் கோபத்தை அறுவடை செய்யக் கூடும்.

ஏனென்றால் நான் சந்தித்த பெரும்பாலான உணர்வாளர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து காட்டும் இந்தப் படங்களை கடந்து செல்லவே விரும்புகிறார்கள். உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு, உணவு கேட்ட மக்களுக்கு, போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியும் ஏராளமான இளைஞர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த குற்ற உணர்ச்சியிலிருந்தே அவர்கள் அவலத்தைக் கடக்கிறார்கள். இந்தியா காட்டும் படங்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலையில் தொடர்புடையவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். போர்க் குற்றங்களை மறைத்து போட்டோக்களை வெளியிட்டு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டிய பகுதி. நாஜிக்களின் கொலைகள நடந்து முடிந்த சில காலத்திற்கு அந்தக் கொலைக் கூடங்கள் குறித்த செய்திகள் எதுவும் உலகிற்குத் தெரியவில்லையாம். அங்கிருந்து தப்பி வந்த இருவர் கொடுத்த தகவலும். அறம் சார்ந்து எழுத நினைக்கும் சில ஆன்ம பத்திரிகையாளர்களாலுமே யூதப் படுகொலை உலகிற்கு வெளிக் கொணரப்பட்டது. அன்றைய உலகச் சூழலில் இரு துருவ அரசியல் உண்மைகள் வெளிவர ஏதுவாக இருந்திருக்கலாம் ஆனாலும் நாம் ஆகக கூடிய சாத்தியங்களோடு இரண்டு மூன்று விஷயங்களைப் பேசியாக வேண்டும்.

ஒன்று பல்லாயிரம் பல்லாயிரமாய் கொல்லப்பட்ட மக்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்து இலங்கை அரசை தண்டிக்க வேண்டும்.

இந்தப் போரில் இந்தியாவின் கொலை வெறியை உலகுக்குச் சொல்ல வேண்டும்.

இந்தப் போர் இன்னும் முடியவில்லை என்பதை சிங்கள பெரும்பான்மை வாதிகளுக்கும், அதிகாரப் பசி கொண்ட இந்தியத் தரப்பிற்கும் சொல்ல வேண்டும் என்பதே எங்களை இப்போது ஆறுதல் படுத்தும்.

நன்றி : வினைவு மற்றும் .paristamil.com

Sunday, June 14, 2009

பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் தமிழ் மக்களை ஓரம்கட்டுகின்றன


பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் தமிழ் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும், ஓரங்கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, பணம் சம்பாதிக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், அவர்களின் பிரச்சினைகளை முறையாக அணுகாது தவிர்த்து வருகின்றன.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றம் பற்றியும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அடிக்கடி அறிக்கை வெளியிடும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன, தமிழர்களின் பிரச்சினையை முறையாக அணுகத் தவறி வருகின்றன.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் தமது கூட்டங்களில், தமிழர்கள் என்ற சொற் பிரயோகத்தைத் தவிர்த்து, தமிழர்களின் அபிலாசைகளை வலியுறுத்தாது, “இடம்பெயர்ந்த மக்கள்” என்ற சொற் பதங்களை மட்டும் அவை பாவித்து வருகின்றன.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள், அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழ் மக்கள் என்ற சொற் பிரயோகத்தையே பாவிப்பதை தவிர்க்க ஆரம்பித்திருப்பதால், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை எனவும் சுட்டடிக்காட்டப்படுகின்றது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 11வது கூட்டத்தொடரில் பங்கு பற்றிவரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறிலங்காவின் மனித உரிமை பற்றி ஆராய்வதற்காக நேற்று இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும் ‘சர்வதேச சர்வ நம்பிக்கைக்கான அமைப்பும்’ தமிழ் மக்களின் விடயத்தை சிறப்பாக அணுகியிருந்தது.

மற்றொரு கூட்டத்தை பிரித்தானியவை தளமாக கொண்டு இயங்கும் ‘பன்னாட்டு மன்னிப்புச் சபை” கூட்டியிருந்த பேதிலும், தமிழர்கள் என்ற சொற் பிரயோகம் பாவிக்கப்படாது, தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் ஆராயாது, ஏற்கனவே இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி மட்டுமே பேசியுள்ளன.

நன்றி : www.paristamil.com

Friday, June 12, 2009

பிரபாகரனை வஞ்சகமாகக் கொலை செய்ய இராசீவ்காந்தி ஆணையிட்டார் - அதரப்புர்வ அறிக்கை



செப்டெம்பரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஓர் இந்தியத் தூதுக்குழுவுக்கும் இடையே பலாலியில் அரசியல் உரையாடல் நடைபெற்றது. கண்ணுக்கெட்டும் தொலைவில் அமைதித் தீர்வு வந்துவிட்டாற் போல் தெரிந்தது. இடைக்கால நிர்வாக மன்றம் (சபை) அமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்க வேண்டியிருந்தது. பலாலியில் எனது இராணுவத் தலைமை யகத்தில் இந்தியத் தூதர் ஜெ.என். தீட்சித்தின் தலைமையில் நடைபெறவிருந்த சந்திப்புக்கு 1987 செப்டெம்பர் 16-17 என நாள் குறிக்கப்பட்டது.

1987 செப்டெம்பர் 14/15 இரவில் தீட்சித் என்னைத் தொலை பேசியில் அழைத்து, பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு வரும்போது அவரைத் தளைப்படுத்துங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள் என்று கட்டளையிட்டார். பிறகு உங்களை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு நான் அனைத்துப் படைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் திபிந்தர் சிங்கை அழைத்துப் பேசினேன். நாங்கள் அறம்பிழாப் படையினர் ஆதலால் வெள்ளைக் கொடியுடன் பேச்சு நடத்த வருகிறவர்களைச் சுட மாட்டோம் என்று தீட்சித்துக்குச் சொல்லிவிடும்படி திபிந்தர் சிங் எனக்குக் கட்டளையிட்டார். பிறகு நான் கொழும்பிலிருந்த தீட்சித்தை அழைத்து, இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன். உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன் என்றும் அழுத்திச் சொன்னேன். (இந்திய இலங்கை) உடன்பாட்டின் செய லாக்கத்தில் எழுந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்திய அமைதிக் காட்டிய படைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துள்ளது என்று சுட்டிக் காட்டினேன். தீட்சித் சொன்ன பதில் இதுதான்:

"அவர் (இராசீவ் காந்தி) எனக்கு இந்தக் கட்டளைகளைத் தந்துள்ளார். இராணுவம் இதிலிருந்து கழன்றுகொள்ளுமானால், இந்திய அமைதிக் காப்புப் படையின் கட்டளைத் தளபதி ஆகிய நீங்களே பொறுப்பாவீர்கள்''

மறுநாள் காலை அப்போது இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் பி.சி. ஜோஷி என்னை அழைத்து, தீட்சித்தின் கட்டளை தொடர்பான என் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி எரிச்சலுற்றார். உடனே அவர் பலாலியில் இருந்த என்னிடம் பேசும்படி அனைத்துப் படைத் தளபதிக்குச் சொல்லி விட்டார். விடுதலைப் புலித் தலைவர்களைச் சந்திப்பதற்காக என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார். 1987 செப் டெம்பர் 16இல் நடக்கவிருந்த கூட்டத்தில் பிரபாகரன் கலந்து கொள்வதையும் அனைத்துப் படைத் தளபதியே உறுதிசெய்ய வேண்டும் என்றார். பிரபாகரன் பலாலி வந்து சேர்ந்தவுடன் தீட்சித் துக்குத் தகவல் தெரிவிக்கச் சொன் னார். தகவல் கிடைத்தவுடன் தீட்சித் கொழும்பிலிருந்து உரிய நேரத்தில் புறப்பட்டு வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அனைத்துப் படைத் தளபதியும் நானும் யாழ்ப்பாணத்துக்கு உலங் கூர்தியில் (ஹெலிகாப்டர்) பறந்து சென்று பிரபாகரனைச் சந்தித் தோம். பேச்சுவார்த்தைக்காக அவரையும் அழைத்துக் கொண்டு பலாலி திரும்பினோம். கொழும் பில் உள்ள இந்தியத் தூதரகத்துக் குத் தகவல் கொடுத்து தீட்சித் திட்டப்படி பகல் 11 மணிக்கு பலாலி வரச் செய்தோம். நான் அவரை வரவேற்று, லெப்டினண்ட் ஜெனரல் திபிந்தர் சிங்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவையும் சந்திப்பதற்காக அதிகாரிகள் உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். பேச்சு வார்த்தை நடந்து மிகவும் வெற்றி கரமாக முடிந்தது. எங்களில் பெரும்பாலார் இந்திய அமைதிப் படை 1987 திசம்பருக்குள் இலங்கையை விட்டு வெளியேறி விடும் என்ற முடிவுக்கு வந்தோம். முடிவில் முட்டுக்கட்டை நீங்கி விட்டது, அமைதி நெருங்கி வந்து விட்டது என்றே கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் நினைத்தோம். பகலுணவுக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினர் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வதை நான் உறுதி செய்தேன். அவர்கள் தங்கள் ஊழியர்களின் வழிக்காவலுடன் சாலை வழியாகப் பயணம் செய்வதையே விரும்பினார்கள்.

அநேகமாக இந்த நிகழ்ச்சியை வைத்தே, இந்திய அமைதிக் காப்புப் படை செய்ய வேண்டியதைச் செய்வதற்குச் சிறிதும் அணியமாய் இல்லை என்று தீட்சித் இந்திய அரசுக்கு எழுதியதாகத் தகவல். அமைதிப் படைத் தளபதிகள் பிரபாகரனுக்கு அசாதாரண மரியாதை காட்டு கிறார்கள், "அவருக்கு வணக்கம் கூடத் தெரிவிக்கிறார்கள்' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். முடிவில், 54ஆம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியை மாற்றா விட்டால் பேரழிவுச் சூழல் உருவாகக் கூடும் என்றும் தெரிவித்தார்.

("ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் இலங்கை சென்ற இந்திய அமைதிப் படைத் தளபதிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் அர்கிரத் சிங் எழுதிய "சிறிலங்காவில் தலையீடு' நூல், பக்கம் 57-58)

Maj.Gen.Harhirat Singh (Retd.) Intervention in Sri Lanka - The IPKF Experience Retold, 2007 Manohar Publishers, New Delhi, Price : Rs.545